Tamilnadu
“60 நாட்களுக்கு மேல் என்ன நடக்க போகிறது என்று பாருங்கள்..” : ஆளுநர் RN.ரவியை எச்சரித்த TR.பாலு!
சென்னை கிழக்கு மாவட்ட அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் கொள்கையை காஞ்சியில் கற்றவர் என்ற தலைப்பில் அம்பத்தூர் பாடியில் நடைபெற்றது. அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் டி எஸ்.பி.ராஜகோபால் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற கொறாடா கே.வி செழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிரை ஆற்றினர்.
இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, “பேராசிரியர் அன்பழகன் தங்களின் ரத்தத்திலும், உயிர் அணுக்களில் கலந்து இருக்கின்றார். ஆலயம் பணியினை சிறப்பாக செய்து வருகின்றார் அமைச்சர் சேகர்பாபு.
கட்சியில் சில சில பிரச்சினைகளை தொண்டர்களுடன் இருந்தால் விட்டு கொடுத்து செல்ல வேண்டும் என்று பேராசிரியர் சொல்வார். சுயமரியாதை பிரச்சாரத்தை ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்துடன் செய்யல்பட வேண்டும். போலிஸ் தொழில் இருக்கும் ஒரு ஆள் இங்கு வந்து இருக்கின்றார். நேர்மையாவும், தூய்மையாகவும் இல்லாத ஒரு நபர் ஆளுனராக உள்ளார்.
ஆளுநர் ரவி சொல்கின்றார் சனாதனம் தான் பெரியது என சொல்கின்றார். புதிய கல்வி கொள்கை , நீட் தேவை என சொல்ல ஆளுநர்யார் ? திருவள்ளுவருக்கு சாதி, மதத்தை அடையம் செய்கின்றார் அது ஒரு பொதுமறை. பாஜக ஆட்சி இனி தொடராது. காங்கிரஸ் கட்சி சாதாரண கட்சி இல்லை. மிக பெரிய கட்சி இப்போது இப்படி இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக மீண்டும் உயரத்தில் வரும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.
361/4 அரசியலமைப்பு சட்டம் சரத்து உங்கள் மேல் தொங்கி கொண்டு இருக்கின்றது. நீங்கள் ஒன்று அசைத்து பார்க்க முடியாத ஆள் இல்லை கவர்னரே. நாளை அல்லது நாளை மறுநாள் நோட்டீஸ் அனுப்படும். அடுத்த 60 நாட்கள் காத்திருப்போம். அதுக்கு மேல் என்ன நடக்க போகின்றதை பார்க்க தான் போகின்றீகள். தளபதி முக.ஸ்டாலின் ஆட்சி செங்கோட்டையில் பறக்கும்” என்று தெரிவித்தார்
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !