Tamilnadu
விபத்தில்லா பாதுகாப்பான புத்தாண்டு.. சென்னை காவல்துறைக்கு குவியும் பாராட்டு !
புத்தாண்டை முன்னிட்டு விபத்தில்லா புத்தாண்டாக அமைந்ததற்கு சென்னை காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து கண்காணிப்பிற்கு சமூக வலைதளத்தில் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு உயிரிழப்பில்லா புத்தாண்டு கொண்டாடுவதை நோக்கமாக வைத்து சென்னை காவல் துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டது. 365 வாகன சோதனை கூடாரங்கள் அமைத்து 16 ஆயிரம் போலீசார் களத்தில் இறங்கி தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மேல் யாரேனும் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கையும் சென்னை காவல்துறையால் விடுக்கப்பட்டது.
அதேபோல புத்தாண்டு இரவு விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல், இதில் 360 வாகனங்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாகவுக், அதி வேகமாக செல்லுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட விதி மீறலில் ஈடுபட்ட 572 வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறையின் இது போன்ற ஏற்பாடுகள் காரணமாக, சென்னை வளசரவாக்கத்தில் நடந்த விபத்து ஒன்றைத் தவிர சென்னையில் விபத்துகளே ஏற்படாமல் புத்தாண்டு சென்றது. சென்னையில் இது போன்ற பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாடப்பட்டதற்கு பொதுமக்கள் சென்னை காவல் துறை சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து பாராட்டுக்கள் குவித்து வருகின்றனர்
பொதுமக்களின் பாராட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தில், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் விபத்து இல்லாத இந்த புத்தாண்டை கொண்டாடி இருக்க முடியாது என மக்களுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!