Tamilnadu
உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல.. சென்னை மக்கள் அதிகம் விரும்பும் உணவு பிரியாணி: Swiggy வெளியிட்ட டாப் 5 லிஸ்ட்
நாம் வாழ்வதற்கு அடிப்படையான விஷயங்களில் உணவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உலகில் பலவகையான உணவுகள் உள்ளது. ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரங்களுக்கு ஏற்ப அந்த உணவுகள் அமையும்.
இந்தியாவிலேயே வட இந்தியா - தென் இந்தியாவின் உணவு வகைகள் மாறுபட்டுக் காணப்படும். அங்கே முழுவதும் சப்பாத்தி, பருப்புதான் அதிகமாகக் காணப்படும். ஆனால் தமிழ்நாட்டிலோ சோறு குழம்பு இல்லாமல் யாருக்கும் சாப்பாடு உள்ளே இறங்காது.
இவ்வளவு ஏன், தமிழ்நாட்டிலே மாவட்டந்தோறும் உணவுப் பட்டியல் சில நேரங்களில் மாறும், பெயர்களும் வெவ்வேறாக அழைக்கப்படும். இப்படி மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு என கலாச்சாரங்களுக்கு ஏற்ப உணவு வகைகள் உலகம் முழுவதும் இருக்கிறது.
இந்த வகையில் உலகிலேயே சிறப்பான உணவு கிடைக்கும் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா உள்ளதாக TasteAtlas அன்மையில் தெரிவித்திருந்திருந்தது. இதிலும் Hyderabad Biriyaniதான் அதிகமான மக்கள் விருப்பமான உணவாக உள்ளது எனவும் தெரிவித்திருந்தது.
இதேபோன்று ஸ்விக்கி நிறுவனமும் மக்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுப் பட்டியலையும், அதிகம் ஆர்டர் செய்தவர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த வகையில் 2022ம் ஆண்டில் சென்னை மக்கள் அதிகம் ஆர்டர் செய்த டாப் 5 உணவை பட்டியலிட்டுள்ளது.
அதில், எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணியின் சிக்கன் பிரியாணிதான் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக தமிழ்நாட்டு மக்களின் காலை உணவான இட்டிலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதிலும் அடையார் ஆனந்த பவன் இட்டிலியைத்தான் அதிகமானோர் ஆர்டர் செய்துள்ளனர்.
இதையடுத்து மெக்டொனால்ட்-ன் சிக்கன் பர்கர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் பெரி பெரி சிக்கனும், ஐந்தாவது இடத்தில் பாவ் பஜ்ஜி-யும் உள்ளது.
Also Read
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!
-
மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!