Tamilnadu
“உங்கள நேர்ல சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா” : முதல்வருக்கு கடிதம் எழுதிய 3ம் வகுப்பு மாணவி!
தென்காசி மாவட்டம், வினைதீர்த்த நாடார்பட்டி பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி ஆரதான தனது பள்ளிக்கு உதவி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அப்பள்ளிக்கு தேவையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
அதன்படி கடந்த 8ம் தேதி தென்காசியில் நடந்த அரசு நலத்திட்டவிழாவில் சிறுமி ஆராதனா பாராட்டி பேசினார். அப்போது விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில், 3-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய ஆராதனா எனும் குழந்தை, சமீபத்தில், எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
அந்தக் கடிதத்தில், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டிருந்தார். பாருங்கள் ஒரு குழந்தை எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தை படித்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் இந்தக் கடிதம் எழுதி இருப்பார் என நான் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.
குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்தக் கூட்டத்தில் இப்போது நான் அறிவிக்கிறேன். அதற்கு முதற்கட்டமாக, 35 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வளவு சிறு வயதிலேயே நம்பிக்கையோடு எனக்குக் கடிதம் எழுதிய அந்த குழந்தை ஆராதனா, அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று மீண்டும் அந்த சிறுமியை, அந்த குழந்தையை நான் வாழ்த்துகிறேன்..” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி ஆரதான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது மனுவை பெற்று உடனடியாக நடவடிக்ககை எடுத்து தனது பள்ளிக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். நீங்கள் கூறியது போல், இதே பள்ளியில் படித்து பெரிய ஆளாக ஆவேன் என மாணவி ஆரதான தனது வார்த்தைகளில் கூறியுள்ளார்.
மேலும், தனது பெற்றோர், ஊர் மக்கள், நண்பர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்றும் கூறியுள்ளார். பிஞ்சு குழந்தை அன்பினால் எழுதியுள்ள இக்கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ஆராதானா எழுதிய கடித்ததில், “மனுவை ஏற்றுக்கொண்டு நான் அனுப்புன எனது பள்ளிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே பள்ளியில் படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு சொன்னீங்க ஐயா. நிச்சயம் அதே மதிரி நான் ஆவேன் ஐயா. அப்போதும் நீங்களே முதலமைச்சராக இருக்கணும் ஐயா. எங்க அம்மா, அப்பா, ஊர் மக்கள் என்னோட நண்பர்கள் எல்லோரும் சந்தோச பட்டாங்க ஐயா. உங்கள நேர்ல சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!