Tamilnadu
ஆட்டோவின் இருக்கைக்கு பின்னால் அழுகை சத்தம்.. ஆதரவற்று கிடந்த ஒன்றரை மாத குழந்தையை மீட்ட போலிஸ்!
சென்னை அடுத்த செங்குன்றம் பஸ் நிறுத்தம் அருகே காதர் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் ஒன்றரை மாத குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் கோயம்பேடு வரை செல்ல வேண்டும் என காதரிடம் சவாரி கேட்டுள்ளார். இதையடுத்து காதர் அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி கோயம்பேட்டில் இறக்கிவிட்டுள்ளார். பிறகு அவர் அங்கிருந்து செங்குன்றத்தை நோக்கி ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.
அப்போது ஆட்டோவில், குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. உடனே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது பயணியின் இருக்கை பின்னால் இருக்கும் இடத்தில் துணியினால் மூடப்பட்ட நிலையில் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே இது குறித்து காதர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலிஸார் ஆட்டோவில் இருந்த குழந்தையை மீட்டு முதலுதவியளிக்க அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து சென்னை தியாகராய நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தையை பத்திரமாக போலிஸார் ஒப்படைத்தனர். சரியான நேரத்தில் குழந்தையைக் காப்பாற்றி போலிசாருக்கு தகவல் அளித்த ஓட்டுனர் காதரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து இந்த குழந்தையை யார் ஆட்டோவில் விட்டுச் சென்றது யார் பெற்றோர்கள் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?