Tamilnadu
“ஒரு லட்சம் விசைத்தறி நெசவாளர்களுக்கு 6 மாத காலத்திற்கு வேலைவாய்ப்பு” : தமிழ்நாடு அரசு அசத்தல்!
விசைத்தறி வேட்டி சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் விசைத்தறி வேட்டி சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து துறை அதிகாரிகளுடான ஆய்வு மற்றும் கலந்தாலோசிக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில் நடப்பாண்டி இத்திட்டத்தின் கீழ், விசைத்தறி நெசவாளார்கள் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் மட்டும் கொள்முதல் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கொள்முதல் செய்யப்பட்டு கிடங்கில் உள்ள வேட்டி, சேலைகளை வருவாய் துறையின் மாவட்ட வாரியாக தேவை அடிப்படையில் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்புவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான 177.00 லட்சம் வேட்டிகள் மற்றும் 177இலட்சம் சேலைகளில் இதுவரை 50% உற்பத்தி செய்யப்படடுள்ளது.
எஞ்சிய 50% உற்பத்தினை வருகின்ற ஜனவரி 10ஆம் தேதிக்குள் நிறைவு செய்வதற்கு உரிய அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, நடப்பாண்டில் இதுவரை வழங்கப்பட்ட வேட்டி, சேலையில் மாறுதல் செய்யப்பட்டு சேலைகளில் 15 புதிய வண்ணங்களிலும் வேட்டியில் கரை ஒரு அங்குலத்தில் என உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 2023 பொங்கல் பண்டிகைக்கு, வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தொடர்ந்து ஆறு மாத காலத்திற்கு வேலைவாய்ப்பு பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!