Tamilnadu
தாய் இறந்த சோகத்தில் பாச மகன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் நண்பர்கள் - உறவினர்கள்!
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மகன் பென்னிஸ் குமார். இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் MBA முதலாம் ஆண்டு பிடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லை என நண்பர்களிடம் கூறிவிட்டு கல்லூரி விடுதியிலேயே இருந்துள்ளார். பின்னர் நண்பர்கள் வந்து பார்த்தபோது அவரது அறை உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. பிறகு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது பென்னிஸ் குமார் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தாய் இறந்த துக்கத்தில் பென்னிஸ் குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பென்னிஸ் குமார் தாய் மல்லிகா உயிரிழந்துள்ளார்.
இதனால் பென்னிஸ் குமார் கடந்த ஒரு வருடமாகவே யாருடனும் சரியாகப் பேசாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாய் இறந்த சோகத்தில் பாசமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !