Tamilnadu

மூளை சாவு அடைந்த கட்டட தொழிலாளி.. புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் உறுப்புக்கள் தானம் !

புதுக்கோட்டை மாவட்டத்தைத் சேர்ந்தவர் குஞ்சுநாதன். கட்டட தொழிலாளியான இவர் அங்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் வழக்கம் போல வேலைக்கு சென்ற நிலையில் எதிர்பாராத விதமான சாரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் குஞ்சுநாதனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரின் உடலை தானமாக அளிக்க முன்வந்தனர். அதன்படி குஞ்சுநாதனின் இரண்டு சிறுநீரகம், இரண்டு கண்கள் மற்றும் ஒரு கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட முதல் உடல் உறுப்பு தானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவரின் உறுப்புக்கள் தேவை இருப்பவருக்கு அரசின் நெறிமுறைப்படி தேவையானவருக்கு பொருத்தப்படவுள்ளது.

இறந்த பின் உடல் உறுப்புக்கள் தானம் என்பது, நாம் இறந்த பின் நம் மூலம் பிற உயிர்களை வாழ வைக்கமுடியும் என்பதை உணர்த்தும் வகையில் இது போன்ற செயல் அமைகிறது. இந்த கட்டட தொழிலாளியின் இந்த செயலால் 5 பேரின் உயிர் தற்போது காப்பற்றப்படவுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 48 மணி நேரத்தில் 900 கார்களை பஞ்சராக்கிய போராட்டக்குழு.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள் !