Tamilnadu
"பா.ஜ.க அலுவலகமாக மாறிய ஆளுநர் மாளிகை".. CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் தாக்கு!
தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் பல்கலைக்கழகம் போன்ற நிகழ்ச்சிகளில் சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். இவரின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தான் ஒரு ஆளுநர் என்பதையே மறந்து ஒரு பா.ஜ.க கட்சித்தலைவர் போல் ஆளுநர் பேசியும், நடந்து வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க தலைமையில் தமிழக எம்.பிக்கள் கையெழுத்து பெற்ற மனு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்குரிய பொறுப்பிலிருந்து செயல்படாமல் பா.ஜ.க தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படும் ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரி, தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைலையில்தான் ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!