Tamilnadu
சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
மும்பை மாநிலம் மகாராஷ்டிரா கோலாபூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). இவர் துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா ஆகிய முக்கிய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் கோலாபூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகே உள்ள ஹலோந்தி பகுதியில் சிறியதாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
புதிதாக தொடங்கப்பட்ட உணவகத்தில் சூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் உணவகத்திற்குச் சென்று வாடிக்கையாளர்களை கவனித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் நேற்று முன் தினம் இரவு உணவகத்தில் வேலைகளை முடித்துவிட்டு, சங்கிலி - கோலாபூர் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே கல்யாணி உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த மும்பை போலிஸார் உடலை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நடிகை உயிரிழந்த சம்பவம் சக நடிகர், நடிகையர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!