Tamilnadu
சென்னையில் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா- 20 நாடுகள் பங்கேற்பு: Logo வெளியிட்ட அமைச்சர்!
சென்னையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரியிலும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த சென்னை புத்தகக் கண்காட்சி புத்தக வாசிப்பாளர்களுக்கு ஒரு புதையலைப் போன்றது. தாங்கள் படிக்க விரும்பும் புத்தகங்களை மூட்டையாக கட்டி வீட்டிற்கு கொண்டு செல்வார்கள்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு சென்னையில் பன்னாட்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது என்பது இன்னும் புத்தக வாசிப்பாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் இதுவரை தமிழ், ஆங்கிலம் போன்ற புத்தகங்களை மட்டுமே நமது வாசகர்கள் வாங்கி படித்து வந்தனர்.
ஆனால் இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் உலகில் உள்ள அனைத்து முக்கிய நூல்களும் இங்குச் சங்கமிக்க உள்ளது. இதனால் இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழா புத்தக வாசிப்பாளர்களுக்கு ஒரு வேட்டையாக இருக்கப் போகிறது.
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரில் நடைபெற உள்ள பன்னாட்டு புத்தக திருவிழாவை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இணைந்து நடத்துகிறது. இதையொட்டி பன்னாட்டு புத்தக திருவிழாவின் இலச்சினை வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு இலச்சினையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தமிழ் மொழியின் நல்ல இலக்கியங்கள் உலகெங்கும் சென்றடைய வேண்டும், வெளிநாட்டு இலக்கியச் செல்வங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழா நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். முதல் முறையாக சென்னையில் நடைபெறும் இப்புத்தகத்திருவிழாவில் 20 நாடுகள் பங்கேற்கின்றன" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!
-
ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது சரியான அரசியல் முடிவு : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு!
-
"ஓ.பன்னீர்செல்வம் வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!