Tamilnadu
"'வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர்' அண்ணன் எ.வ.வேலு.." - அமைச்சருக்கு புகழாரம் சூட்டிய உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை தெற்கு - வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "நகர்ப்புற ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு - கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் - அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், தி.மு.க மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இதில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று எழுச்சி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "இந்த விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகப்பெரிய பெருமை. இதற்காக அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு என் வாழ்நாள் எல்லாம் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த மாவட்டத்திற்கு பலமுறை வந்துள்ளேன். ஆனால் இந்தமுறை வந்துள்ளதை மறக்கமுடியாத ஒன்றாக கருதுகிறேன். காரணம், நாம் வென்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஒரு சட்டமன்ற உறுப்பினராக வந்துள்ளேன்.
கலைஞர் சொன்னதை, தலைவர் முதலமைச்சர் அவர்கள் சொன்னதை நானும் சொல்கிறேன். "எதிலும் வல்லவர்" அண்ணன் எ.வ. வேலு அவர்கள். இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால் "வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர்" எ.வ.வேலு அவர்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல; பல மாங்காய்களை அடிப்பவர் அண்ணன் வேலு. அதனை என்னுடைய நேரடி அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். மற்ற மாவட்டங்களுக்கு சென்று கழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக வழிநடத்தும் இவர், தன்னுடைய மாவட்டத்தில் சும்மா இருப்பாரா? கழகத்தின் கோட்டையாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் என்றும் அவர் நம்முடைய தலைவரின் போர்வாளாக இருப்பார்.
Also Read
-
தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் : முழு பட்டியல் இதோ!
-
விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! : எங்கு? எப்போது?
-
“கழக அரசுக்கும், மீனவர்களுக்குமான உறவு கடலைப் போலவே ஆழமானது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி 4 தொழிலாளர் விரோத சட்டங்கள் அமல் : ஒன்றிய பா.ஜ.க அரசின் அராஜகம்!
-
”விவசாயிகளின் கண்ணீரை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி” : செல்வப்பெருந்தகை ஆவேசம்!