Tamilnadu
விளையாடும்போது நடந்த விபரீதம்.. அண்ணன் கண்முன்னே தம்பிக்கு நேர்ந்த துயரம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உத்தண்டராமன். இவரது மனைவி உத்ரா. இந்த தம்பதிக்கு அகிலன், உத்தண்டு என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் வீட்டிற்குமுன்பே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பே இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் அகிலன் தவிறி கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து சகோதரன் உத்தண்டு பதறியடித்து கதறியுள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் அகிலனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குழந்தைகளை வைத்து தவெக பிரச்சாரம் : அரசியல் உள்நோக்கம் கொண்டது - சென்னை ஐகோர்ட் அதிருப்தி கருத்து!
-
போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? : உதயநிதி கேள்வி!
-
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்.. : ஆதவ் அர்ஜூனாவுக்கு தி.மு.க பதிலடி!
-
“ஆம்னி பஸ்ஸில் 8 மடங்கு கொள்ளை ; மக்களின் காதுகளில் நாராசமாகதான் ஒலிக்கின்றன” : கே.என்.நேரு அறிக்கை!
-
தவெக நிர்வாகி வீட்டில் 135 KG போதைப்பொருள் பறிமுதல் - CM விஜயிக்கு தொடர்பு ?: எம்.எம்.அப்துல்லா கேள்வி!