Tamilnadu
நகையை பாலிஷ் போடக் கொடுத்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கைவரிசை காட்ட முயன்ற வடமாநில கும்பல்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராணி சந்திரிகா. இந்த தம்பதியின் மகள் சந்திரகாந்தா.இவர்களது வீட்டிற்கு நேற்று வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் வந்துள்ளனர்.
இவர்கள் தங்க நகைகளை பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறியுள்ளனர். முதலில் ராணி சந்திரிகா மறுத்துள்ளார். ஆனால் அவரது மகள் சந்திரகாந்தா தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழட்டி பாலிஷ் போட கொடுத்துள்ளார்.
பிறகு அவர்கள் மோதிரத்தை பாலிஷ் போட்டி கொடுத்துள்ளனர். இதையடுத்து கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த செயினை கழற்றி கொடுத்துள்ளனர். அப்போது நகையை பாலிஷ் போட்டபோது சற்று நேரத்திலேயே நகைகள் கரைந்ததைக் கண்டு தாயும், மகளும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
உடனே அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், பீகாரை சேர்ந்த ரகுநாதன் ராகு என்றும் அவருடன் இருந்த சிறுவன் அவரது அண்ணன் மகன் என்பதும் விசாரணையில் தெரிந்தது. மேலும் நகையை ஆசிட்டில் கரைத்ததும் தெரிந்ததால் அவர்கள் நகையை நூதன முறையில் கொள்ளையடிக்க வந்துள்ளார்களா என்பது குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!