Tamilnadu
நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.. உறவினர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயர சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலையை ஒட்டி உள்ள ஊர்கவண்டனூர் ஊராட்சி வனப்பகுதி அருகே உ குண்டூர் நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஹாரிப் என்ற வாலிபர் தனது உறவினர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். அப்போது ஹாரிப் அறுவியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் நீர்வீழ்ச்சிக்குள் மூழ்கினார்.
பின்னர், நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த ஹாரிப் காணாததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு இது பற்றி போலிஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின் விரைந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீர்வீழ்ச்சியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிறகு சில மணி நேரம் தேடுதலை அடுத்து ஹாரிப் உடல்மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்வீழ்ச்சியில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு... என்னென்ன கட்சிகள்? எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
“பாஜக ஒரு பாறாங்கள்.. அதை கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்தால்...” - நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கு!
-
“டில்லி சரணம் பாடி பழனிசாமி.. அதிகார பங்கிற்கு ஒரு கட்சியும் ஏறிட்டு பார்க்கவில்லை..” - கி.வீரமணி தாக்கு!
-
சென்னையில் புதிதாக 40,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்! : மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தகவல்!
-
“NDA கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா?” : அமைச்சர் சேகர்பாபு கேள்வி!