Tamilnadu
“பொதுமக்களை அச்சுறுத்தி பிராங்க் வீடியோ”: பிரபல யூடியூப் சேனல்களுக்கு ‘செக்’ வைத்த சைபர் கிரைம் போலிஸ்!
சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை துன்புறுத்தும் வகையிலும் பிராங்க் வீடியோக்களை எடுத்து சிலர் யூ-டியூப் சேனல்களில் பதிவிட்டு வருவதாகவும், குறிப்பாக கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய யூ-டியூப் சேனல்களை முடக்க வேண்டும் எனவும் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ரோகித் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக இன்று ரோஹித்தை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரோஹித், சாலையில் பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் 5 யூ-டியூப் சேனல்கள் பிராங்க் வீடியோக்கள் எடுத்து அதை பதிவிட்டு சம்பாதித்து வருவதாகவும், இந்த சேனல்களை முடக்கக்கோரியும் தான் கொடுத்த புகாரின் பேரில் இன்று விசாரணைக்கு ஆஜரானதாகவும் அவர் கூறினார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட 5 யூ-டியூப் சேனல்களின் உரிமையாளர்களை வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் தெரியாத எண்களில் இருந்து தொடர்ச்சியாக மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும், அதில் பேசிய நபர்கள் "அனைவரும் அமைதியாக இருக்கும்போது, உனக்கும் மட்டும் என்ன" என கூறி மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் முதியவர்களை அச்சுறுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்கள் எடுத்து அதை வெளியிடுவதை சம்மந்தப்பட்ட யூ-டியூபர்கள் கைவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!