இந்தியா

“மலிவான விளம்பர யுக்தி.. TV நிகழ்ச்சியில் இருந்து Get Out”: பிராங்க் செய்து வாங்கிக் கட்டிக்கொண்ட நடிகர்!

மலிவான விளம்பர யுத்தியை செய்ததாக விஷ்வக் மீது மனித உரிமை ஆணையத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருண் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

“மலிவான விளம்பர யுக்தி.. TV நிகழ்ச்சியில் இருந்து Get Out”: பிராங்க் செய்து வாங்கிக் கட்டிக்கொண்ட நடிகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தெலுங்கு சினிமாவில் ‘ஹிட்’ படத்தின் மூலம் நாயகனாக அவதரித்தவர் விஷ்வக் சென். ‘HIT First Case’ படம் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ‘அசோகவனம்லோ அர்ஜூன் கல்யாணம்’ படத்தில் நடித்து, அந்தப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத் வீதிகளில் நண்பருடன் விஷ்வக் சென்றுக்கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் அவர்களின் வாகனத்தை மறித்துள்ளார். அப்போது ‘சோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’ படத்தின் ஹீரோவை தான் பார்க்க வேண்டும். இல்லையென்றால் தான் இங்கேயே தீக்குளித்து இறந்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

மேலும் அவரின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை விஷ்வக்கும் அவரது நண்பர்களும் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபர் விஷ்வக் காரில் சென்றுவிட்டார். விஷ்வக் அதன்பின்னர் ஆட்டோவில் சென்றார். சுற்றி மக்கள் கூட்டம் இருக்க இந்த களேபரம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அனைத்து வீடியோவாக எடுத்து இணைத்திலும் வைரலாக்கியுள்ளனர்.

அவசர தேவை மற்றும் அத்தியாவசிய பணிக்காக செல்லும் சாலையில் பயணிகளுக்கு இடையூறாக இந்த சம்பவம் நடந்ததாக பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது ஒரு Prank show எனத் தெரியவந்துள்ளது.

இவை அனைத்துமே திட்டமிட்டு, படத்தின் ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்ட நாடகமே என தெரியவந்ததும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே மலிவான விளம்பர யுக்தியை செய்ததாக விஷ்வக் மீது மனித உரிமை ஆணையத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருண் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து அம்மாநில தொலைக்காட்சி ஒன்று இந்த சம்பவம் குறித்து விவாதிக்க விஷ்வக் சென்னுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விஷ்வக் சென் செய்த குற்றங்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் தேவி நாகவள்ளி முன்வைத்தார்.

அப்போது குற்றச்சாட்டுகளை பொருத்துக்கொள்ள முடியாத விஷ்வக் சென், கோபத்த்தில் ஆபாச வார்த்தையை நேரலையில் பயன்படுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொகுப்பாளர் , விஷ்வக் சென்னை அங்கிருந்து வெளியேறும்படி, ‘கெட் அவுட்’ என்று கூறி வெளியே அனுப்பினார். இந்த சம்பவம் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories