Tamilnadu

குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் உள்ளிட்ட 3 தீட்சிதர்கள் கைது - போலிஸ் அதிரடி!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் சமீபகாலமாக குழந்தைகள் திருமணம் அதிகளவில் நடந்ததாக புகார்கள் எழுந்தது. கடந்த ஒரே மாதத்தில் 13 வயது சிறுமி மற்றும் 15 வயதி சிறுமியை திருமணம் செய்த வழக்கில் இரண்டு தீட்சிதர்கள், மற்றும் சிறுமிகளின் தந்தை, தயார் கைது செய்யப்பட்டன.

மேலும் இந்த குழந்தை திருமணங்கள் கடந்த காலங்களில் நடந்ததாகவும், அதுதொடர்பான புகார்கள் தற்போது எழுந்தநிலையில், குழந்தைகள் நல அமைப்பினர் மூலம் சிறுமிகள் மீட்கப்பட்டு, திருமணம் செய்த தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குழந்தை திருமண விவகாரத்தில், நேற்று மாலை இதே போன்ற மேலும் ஒரு குழந்தை திருமணப் புகாரில் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர், வினோபால தீட்சிதர், வினோபால தீட்சதரின் மகன் ஆகியோரையும் கடலூர் டெல்டா படை போலிஸார் கைது செய்து எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் பாதுகாப்பில் இருந்த போலிஸார் அவர்களை அப்புறப்படுத்தி தீட்சிதர் ஹேமசபேசவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணம் சட்டப்படி தவறு என்றபோதும் திருட்டுத்தனமாக திருமணம் செய்து வைக்கும் கும்பலை விசாரித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: கடலூரில் குழந்தை திருமணம் - சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர் - தந்தை உள்ளிட்ட 2 பேர் கைது!