Tamilnadu
பெற்றோர்களே உஷார்.. கொதிக்கும் சாம்பாரில் விழுந்து ஒரு வயது குழந்தை பரிதாப பலி!
தருமபுரி மாவட்டம், சாமனூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி சுகுணா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுகுணா அடுப்பிலிருந்து கொதிக்கும் சாம்பாரை எடுத்து கீழே வைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தேன்மொழி என்ற அவரின் ஒரு வயது குந்தை நிலை தடுமாறிக் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சுகுணா உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதையடுத்து குழந்தைக்கு் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி குழந்தை தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!