Tamilnadu
குடிபோதையில் டீ கடையை சூறையாடிய நடிகையின் சகோதரர்.. அதிரடியாக தட்டி தூக்கிய போலிஸார் !
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்மதுரை. இவர் அதேபகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம்போல தனது கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த விக்கி (எ) விக்னேஷ் குமார் என்பவர் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் குமார் சேர்மதுரையில் டீ கடையை தாக்கி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளார். மேலும், கடாயில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சேர்மதுரை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கொலை வழக்கு பதிவுசெய்த போலிஸார் விக்னேஷ் குமாரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த விக்னேஷ் குமார் போலீஸாரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் அவரிடம் இருந்து 100 ரூபாய் பணம், 1 வீச்சு அரிவாள் மற்றும் ஜீப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையில் அவர் நடிகை பாபிலோனாவின் சகோதரர் என்பதும் அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் விக்னேஷ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!
-
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சாத்தான் வேதம் ஓதும் அமித்ஷா; ஊழலைப் பற்றி என்ன அருகதை இருக்கிறது? : செல்வப்பெருந்தகை கண்டனம்!
-
ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... விவரம் என்ன?
-
வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளும் தமிழிசை.. அன்று பால்.. இன்று HCL.. கலாய்க்கும் இணையவாசிகள் - விவரம்!