Tamilnadu
Amazon டெலிவரி வாகனத்தில் இருந்து லேப்டாப் திருட்டு.. கைவரிசை காட்டிய முன்னாள் ஊழியரை சிக்கவைத்த CCTV!
திருவள்ளூர் டோல்கேட் ஜே. ஜே நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் அன்புச்செல்வம். இவர் திருவள்ளூரில் இயங்கி வரும் அமேசான் பொருட்கள் டெலிவரி நிறுவனத்தில் டெலிவரிபாயாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தினமும் மினி வேனில் அமேசான் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நகர் முழுவதும் சென்று அதை டெலிவரி செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி அன்று வழக்கம் போல் அமேசான் டெலிவரி நிறுவனத்தில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்று பிற்பகல் வரை டெலிவரி செய்துள்ளார். பின்னர் வாகனத்தை தனது வீட்டின் அருகே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து திருவள்ளூர் ஜெயா நகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு லேப்டாப் டெலிவரி கொடுக்க சென்றபோது, வாகனத்தில் அதற்கான பார்சல் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு, திருவள்ளூர் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் அவரது வீட்டின் அருகே இருந்த 10 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி-களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் இருந்து லேப்டாப்பை எடுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.
பின்னர் அந்த நபரை போலிஸார் கைது செய்து விசாரணை செய்ததில், திருவள்ளூர் தலகாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சின்னா பாட்ஷா என்பது தெரியவந்தது. மேலும் ஏற்கனவே அமேசான் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்ததும், அங்கு ஊதிய பிரச்சனை காரணமாக பணியிலிருந்து நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!