Tamilnadu
லிப்டில் சிக்கிக்கொண்ட 7 பேர்.. தகவல் அறிந்து விரைந்து மீட்ட போலிஸார்.. பாண்டி பஜாரில் பரபரப்பு !
சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் ஜி.என் செட்டி சாலையில் மல்லு ஜாயிண்ட் என்ற ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. இந்த உணவகத்துக்கு நேற்று வடமாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் அந்த உணவகத்தில் உணவு அருந்துவதற்காக வந்துள்ளனர்.
அப்பொழுது மாடிக்கு சென்று உணவு அருந்துவதற்காக அருகில் இருந்த லிஸ்டில் மாடிக்கு செல்ல பயணித்த போது லிப்ட் பாதியிலேயே சிக்கிக்கொண்டது. பின்னர் உணவகத்தின் நிர்வாகத்தின் சார்பில் லிப்டில் சிக்கிக்கொண்ட ஏழு பேரையும் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துரிதமாக செயல்பட்டு லிப்டை சரி செய்து உள்ளே சிக்கிக் கொண்டிருந்த 3 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை என ஏழு நபர்களையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாக நிலையில் பலரும் காவல்துறையின் துரிதமான செயல்பாட்டிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!