Tamilnadu
வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்கள்.. 2 பேரை கைது செய்த போலிஸ்!
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பாரதி தாசன் தெருவில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியைக் காட்டி அந்த வழியாகச் சென்றவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈட்டுப்பட்டுள்ளனர். இது போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை வைத்து 17 வயது சிறுவன் ஒருவனை போலிஸார் கைது செய்து விசாரித்தபோது, சரித்திர பதிவேடு குற்றவாளி அபிஷேக் (20), அவரது வீட்டில் மறைந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அங்கு சென்று அபிஷேக்கை கைது செய்தனர். பிறகு அப்பகுதியில் முழுமையாக சோதனை செய்தனர். மேலும் குற்றவாளியின் செல்போனை சோதனை செய்தபோது கஞ்சா செடி புகைப்படங்கள் இருந்தை போலிஸார் பார்த்தனர்.
பின்னர் வீட்டின் மொட்டை மாடியில் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டிக்கு அருகே மறைவாக மண் தொட்டியில் கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா வாங்கி பயன்படுத்தி அதில் உள்ள விதைகளை நட்டு செடிகளாக வளர்த்து அதனைப் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சரித்திர பதிவேடு குற்றவாளியான அபிஷேக் மற்றும் அவரது கூட்டாளியான சதீஷ் ஆகிய இருவரை எம்.ஜி.ஆர் நகர் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!