Tamilnadu
வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
திருவாரூர் மாவட்டம், திருவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள். 5 மாத கர்ப்பிணியான இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியைத் தனது இல்லத்திலேயே கணவர் விக்னேஷ் நடத்தியுள்ளார்.
இந்த வளைகாப்பு நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தக்காளி, தயிர், புளி, கருவேப்பிலை, லெமன் சாதத்துடன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது.
இந்த உணவைச் சாப்பிட்ட மாரியம்மாள் உட்பட 8 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அருகே இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த வேலங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளைகாப்பு நிகழ்வில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!