தமிழ்நாடு

பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்... AC கம்ப்ரசர் வெடித்ததில் ஏசி மெக்கானிக் 2 பேர் பரிதாப பலி!

சென்னையில் ஏசி கம்ப்ரசர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்... AC கம்ப்ரசர் வெடித்ததில்  ஏசி மெக்கானிக் 2 பேர் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் AC பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கிண்டி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனதில் பழுதடைந்த AC-யை பழுதுபார்ப்பதற்காக சின்னதுரை சென்றுள்ளார்.

மேலும் தன்னுடன் வேலை பார்க்கும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார்,கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் (41) ஆகிய இருவரையும் சின்னதுரை அழைத்துச் சென்றுள்ளார்.

பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்... AC கம்ப்ரசர் வெடித்ததில்  ஏசி மெக்கானிக் 2 பேர் பரிதாப பலி!

அங்குச் சென்ற மூன்று பேரும் 3வது மாடியிலிருந்த ஏசி அவுட்டோர் கம்ப்ரசரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காஸ் கசிந்து வெடித்தது. இந்த வெடிவிபத்தில் சின்னதுரை, இந்திரகுமார், சரவணன் ஆகிய 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்... AC கம்ப்ரசர் வெடித்ததில்  ஏசி மெக்கானிக் 2 பேர் பரிதாப பலி!

இதையடுத்து இந்த 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சின்னதுரை, இந்திரகுமார் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories