Tamilnadu
Reels மோகம்.. காணாமல் போன 17 வயது சிறுமி: Instagram-ம் மூலம் கண்டுபிடித்து மீட்ட சென்னை போலிஸ்!
சென்னையில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்து வரும் 17 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காப்பக நிர்வாகம் சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து சிறுமி திடீரென மருத்துவமனையிலிருந்து காணாமல் போனதைக் கண்டு காப்பக நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சிறுமியைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ போடுவதில் ஆர்வம் கொண்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது பக்கத்தை ஆய்வு செய்தபோது சிறுமி எண்ணூரில் இருப்பது தெரியவந்தது.
பின்னர் அங்கு சென்ற போலிஸார் சிறுமியை மீட்டனர். மேலும் காப்பகத்தில் இருக்க சிறுமி விரும்பாததால் அவரை அவரது தந்தையிடமே போலிஸார் ஒப்படைத்தனர்.
மேலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்களைச் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ செய்வதற்காகச் சிறுமி மருத்துவமனையிலிருந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
Also Read
-
“பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்” -சேந்தமங்கலம் திமுக MLA மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
-
இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை நிலவரம் இதோ!
-
“களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடுவோம்!” : துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலமானார்...
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விவரம் உள்ளே!