Tamilnadu
“சோப்பு வாங்கினால் டூவிலர்; கோல்டுகாயின் இலவசம்”: ஆசை காட்டி நூதன மோசடி - ஸ்கெட்ச் போட்டு தூங்கிய போலிஸ்!
அரியலூர் மாவட்டம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸ்லின். இவரது வீட்டிற்கு கடந்த வாரம் துணி துவைக்கு சோப்புகளை விற்பனை செய்ய கும்பல் ஒன்று வந்துள்ளது.
மேலும் அந்த கும்பல் தங்களிடம் சோப்பு வாங்கினால் கூப்பன் ஒன்று இலவசமாக வழங்குவோம். அதில், 50% தள்ளுபடி விலையில் குக்கர், மிக்சி மற்றும் வாகனம் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என ஆசை வார்த்தைக் கூறி விற்பனை செய்து வந்துள்ளனர்.
அவர்களது பேச்சை நம்பி, ரோஸ்லின் சோப்புகளை வாங்கியுள்ளார். பின்னர் அந்த கும்பல் அவரது செல்போன் நம்பரையும் வாங்கிச்சென்றுள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாளைக்கு முன்பு, ரோஸ்லின் நம்பருக்கு தொடர்புக்கொண்ட மர்ம நபர் ஒருவர், “எங்களிடம் சோப்பு வாங்கியதால், உங்கள் கூப்பணில் இருசக்கர வாகனமும், கோல்டு காயின் ஒன்றும் பரிசாக விழுந்திருக்கு. ஆனால் அதனை பெறுவதற்கு பரிசு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை செலுத்தினால் போதும்” எனக் கூறியுள்ளனர்.
அப்போது ஜி.எஸ்.டி எவ்வளவு கட்டவேண்டும் என ரோஸ்லின் கேள்வி எழுப்பியதற்கு ரூ.14,860 எங்களுடைய வங்கி கணக்கில் இருந்து நேரடியாகவே பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அதோடு விடாமல் தொடர்ந்து பணத்தை கட்டச் சொல்லி தொல்லைக் கொடுத்துள்ளனர்.
இதனால் அதிருப்தி அடைந்த ரோஸ்லின் கீழப்பழூவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்தப்புகாரின் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சண்முகவேல், சின்ன ராமசாமி, மாரியப்பன், குருநாதன், மாடசாமி உள்ளிட்ட 14 பேரை போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகளை போலிஸாரிடம் பிடித்துக்கொடுத்த அந்த பெண்ணுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!