Tamilnadu

கோவை மக்களே உஷார்! குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்.. போட்டோ எடுத்து போட்டு கொடுத்தால் ரூ.500 சன்மானம் !

சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் வீட்டிற்கே சென்று நேரடியாக குப்பையை பெற்று செல்கின்றனர்.

இருப்பினும் சிலர் அவர்கள் வரும் நேரத்தில் குப்பையை அவர்களிடம் வழங்காமல் சாலையோரம் குப்பையை கொட்டி மீண்டும் அந்த பகுதியை அசுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள். சில பொதுமக்களிடன் இது போன்ற நடவடிக்கைகளை தடுக்க தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை அடுத்துள்ள காட்டம்பட்டி என்று ஊராட்சி பகுதி உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் நேரடியாக பொதுமக்களின் வீட்டிற்கு சென்று குப்பைகளை பெற்றுகொள்கின்றனர். ஆனால் சிலர் அவர்களை மதிக்காமல் சாலையோரத்தில் குப்பைகளை போட்டு செல்கின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில் அந்த பகுதியின் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் விளம்பர போர்டு மூலம் ஒரு அருமையான விதியை பிறப்பித்துள்ளார்.

அந்த போர்டில், "காட்டம்பட்டி ஊராட்சி.. இங்கு குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும்.. குப்பை கொட்டுவதை வீடியோ படம் பிடித்து காட்டினால் ரூ.500 பரிசுத்தொகை வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தையடுத்து அந்த பகுதியிலுள்ள மக்கள் அங்கு குப்பைகளை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அங்கிருக்கும் 9 வார்டுகளில் முதல் 4 வார்டுகளில் மட்டுமே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த யோசனை அங்குள்ள ஊர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Also Read: கிராம சபை கூட்டம் : பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த பள்ளிக்கல்வித்துறை !