Tamilnadu
’மதுரைக்காரங்கன்னா சும்மாவா..’ : கணவனை விளையாட அனுப்ப பத்திரம் எழுதி கொடுத்த மணப்பெண்!
திருமண நிகழ்வில் மணமக்களின் நண்பர்கள் செய்யும் பலவிதமான சேட்டை சம்பவங்களைப் நாம் பார்த்துள்ளோம். ஏன் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கூட மணமக்களிடம் அவரது நண்பர்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொடுப்பதை பார்த்திருப்போம்.
ஆனால் மதுரைக்காரங்கன்னா சும்மாவா என்பது போல இந்த வீடியோக்களை எல்லாம் தட்டி தூக்கும் விதமாக இது அதற்கும் மேல என்பது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே ஹரிப்பிரசாத், பூஜா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இதில் ஹரிப்பிரசாதின் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, அவர்கள் மணப்பெண் பூஜாவிடம், திருமணத்திற்கு பிறகும் தங்களது நண்பரை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
அந்த பத்திரத்தில், "பூஜா எனும் நான் சூப்பர் ஸ்டார் அணியின் கேப்டனும் எனது கணவருமான ஹரிப்பிரசாத் அவர்களை இன்று முதல் வரும் அனைத்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சூப்பர் ஸ்டார் அணிக்கு கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறேன்" என எழுதப்பட்டிருந்த பத்திரத்தில் பூஜா கையெழுத்துப் போட்டுள்ளார்.
தற்போது இந்த பத்திரம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் பல விதமாக தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!