Tamilnadu

"அனைத்து துறையிலும் வடஇந்தியாவை விட முன்னேறிய தமிழ்நாடு" -புள்ளிவிவரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை !

இந்தி தெரியாததால் தமிழ்நாடு முன்னேறவில்லை என பல்வேறு தரப்பினர் அதிலும் குறிப்பாக பாஜகவுக்கு ஆதரவானவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்களின் கருத்து தவறு என்று பல்வேறு முறை தரவுகளோடு நிரூபித்த பின்னரும் இது போன்ற அவதூறை தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கட்டுரை பின்வருமாறு, பள்ளிக்கல்வியை முடித்து உயர் கல்வி சேர்ப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம் - இது அகில இந்திய சராசரியையிட இருமடங்கு அதிகம்.

தமிழ்நாடு - 38.2

குஜராத் - 11

உ.பி - 1.8.

ராஜஸ்தான் - 10

இந்திய சராசரி : 20.4

கல்வி நிலையங்களின் தரம் 2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஒன்றிய அரசின் HRI துறை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி, முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ்நாட்டில்தான், பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருப்பதோ வெறும் மூன்றுதான்.

முதல் 9 சிறந்த பொறியியல் கல்லூரிகளில்,

தமிழ்நாடு - 22;

குஜராத் - 5,

ம.பி-3

உ.பி-6.

பிகார் - 1:

ராஜஸ்தான் - 3

முதல் 20 சிறந்த பல்கலைக்கழகங்களில்

தமிழ்நாடு - 24

குஜராத் - 2

உ.பி-7

பிகார் - 1

ராஜஸ்தான் -4

தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) -

தமிழ்நாடு - 84.7

குஜராத் - 55.25

பி-48.9

உபி - 28 ,

ராஜஸ்தான் - 31.02

சத்திஸ்கர் - 54.4

கல்வி விகிதாசாரம் (Literiley Rate] -

தமிழ் நாடு - 80.33%

குஜராத் - 79%

ம.பி - 70%

ராஜஸ்தான் - 67%

சத்திஸ்கர் - 75%

ஆண்-பெண் விகிதாசாரம் ஆயிரம் குழந்தைகளுக்கு (இது குறைவாக இழுத்தால் பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்)

தமிழ்நாடு - 943

குஜராத் - 890

ம.பி - 918

உபி - 902, ராஜஸ்தான் - 888

இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட குறிப்பாக பிஜேபி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களள விட பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது.

1.தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது

2.இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் நிலை உயர்வாக உயானது

3.இந்தியாவில் தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் நிலை மிக மேம்பட்டு உள்ளது.

4.தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்.

5.தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் உள்ளனர்.

இப்படியிருந்தும் இந்தி படிக்காததால் திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என பொய்களை, வாய்க் கூசாமல் சொல்லிக் பெண்டு இருகிறார்கள், தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: ‘10,000 கொடுத்து அண்ணாமலைய பில்டப் பண்ணி பேச சொன்னாங்க… நானும் பைத்தியகாரதனமா பேசிட்டேன்’ : நடிகை வாசுகி!