Tamilnadu
அடுத்த வாரம் ஒன்றிய அமைச்சரை சந்திக்க டெல்லி செல்லும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் - காரணம் என்ன ?
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர், மருத்துவமனையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் முதல் தவணை 2-வது தவணை, பூஸ்டர் தடுப்பூசி போன்றவை செலுத்தப்படுகிறது. தற்போது சுமார் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 4,308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சர் உத்தரவின் பேரில் கோவை, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து பேசுவதற்காக அடுத்த வாரம் ஒன்றிய அமைச்சரை சந்திக்க டெல்லி செல்லவுள்ளேன். மேலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கவுள்ளோம்.
அதுமட்டுமின்றி, தற்போது கொரோனா தடுப்பூசிகள் குறைவாக இருப்பதால், தடுப்பூசிகள் கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையோடு சந்திக்க உள்ளோம்." என்று தெரிவித்தார்.
Also Read
-
“இந்த மசோதாவால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும்” - பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!