Tamilnadu

3 நாள் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது: போக்குவரத்துறை கூறியது என்ன?

தமிழ்நாட்டில் சனி,ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் என அடுத்த மூன்றுநாள் தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் எவ்விதமான சிரமமும் இல்லாமல் வெளியூர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 610 சிறப்புப் பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கோயம்பேட்டிலிருந்து இன்று 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை 185 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் விடுமுறை முடிந்தும் வெளியூர்களிலிருந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்க போதுமான நடவடிக்கையைப் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மேலும் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்தால் பேருந்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற நாட்களில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Also Read: பீகார் அரசியல் திருப்பம்.. இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக பலவீனமாகும்.. இந்தியா டுடே கணிப்பு !