Tamilnadu
"கண் திருஷ்டி விழுந்துருச்சு.." - சாமியாரை வீட்டுக்குள் விட்ட குடும்பம்.. சாமியார் செய்த அதிர்ச்சி செயல்!
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர், தாம்பரத்தில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகள் ஒன்று உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருக்கும் கோயிலுக்கு சாமி கும்பிட தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அப்போது அந்த கோயிலுள்ள பூசாரி சந்திர சேகர் (வயது 55) என்பவர், அவர்களது மகளுக்கு அதிகளவு திருஷ்டி இருப்பதாகவும், அதனை கழிக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும், அதற்காக 15 நாள் உங்கள் வீட்டில் தங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இவர்களும் அதனை நம்பி, பூசாரியை வீட்டிற்குள் தங்க அனுமதி வழங்கியுள்ளனர். அப்போது அந்த பூசாரி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக்கண்ட சிறுமியின் பெற்றோர்கள் அந்த சாமியாரை அடித்து உதைத்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த காவல்துறையினர், பூசாரி மீது போக்சோ வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !
-
‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !