Tamilnadu
44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: Drums இசைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஜூலை 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த பிரம்மாண்ட தொடக்க விழாவை அடைத்து மாமல்லபுரத்தில் போட்டிகள் நடைபெற்றது.
இதையடுத்து இன்று செஸ் ஒலிம்யாட் போட்டியின் நிறைவு விழா கலை நிகழ்வுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கருப்பு suit உடை அணிந்து கெத்தாக கலந்து கொண்டுள்ளார். கலை நிகழ்வுகளுடன் நிறைவு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் டிரம்ஸ் சிவமணி இசைத்துக் கொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவமணியிடம் இருந்து ட்ரம்ஸ் ஸ்டிக்கை வாங்கி உடனே இசைக்க துவங்கினார்.
இதைப்பார்த்த அரங்கிலிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நிமிடங்கள் ட்ரம்ஸ் இசைத்தார். பின்னர் ட்ரம்ஸ் சிவமணி இசையில் அரங்கம் அதிர்ந்தது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!