Tamilnadu
புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு விரைவில் சிலை.. முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!
முத்தமிழறிஞர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.கவினர் அமைதி பேரணி சென்று, கலைஞர் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாநில கழக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் முதல்வர் ரங்கசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது, அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு, எனவே புதுச்சேரி அரசு சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது மாநில கழக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், நித்திஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Also Read
-
பக்காவாக முடிந்த தேர்தல் அறிக்கை பணி.. அடுத்த டார்கெட்.. பிரச்சாரத்தை தொடங்கும் கனிமொழி எம்.பி…!
-
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதற்கு? - கலைஞரை வைத்து விளக்கம் கொடுத்த கனிமொழி எம்.பி.! - விவரம்!
-
மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!
-
திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தி.மு.க : 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!