Tamilnadu
420 ரூபாய் சேலைக்கு ஆசைப்பட்டு 55 ஆயிரம் ரூபாயை இழந்த சோகம் .. ஆன்-லைன் ஷாப்பிங்கில் நேர்ந்த பரிதாபம் !
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூ-டியூப் பார்த்துக்கொண்டிருந்த போது அதில் உடை குறித்த விளம்பரம் ஒன்று வந்துள்ளது. உடனே அதன் உள் சென்றவர் அதில் இருந்த பேபி டிரஸ் மற்றும் சேலை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
மேலும் அதற்கான தொகையாக போன் பே மூலம் ரூ.420 செலுத்தியுள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்து 10 நாட்கள் ஆன பின்பும் ஆர்டர் செய்த பொருட்கள் வராததால் அந்த இணையதளத்தில் உள்ள போன் நம்பரை தொடர்பு கொண்டுள்ளார்.
எதிர் முனையில் பேசியவரோடு ஆர்டர் செய்த பொருள் வராதது குறித்து தகவல் தெரிவித்து போனை வைத்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.54 ஆயிரத்து 999 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனால் அவர் கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்திவந்தனர். அப்போது, மொபைல் போனை வைத்து போலிஸார் சோதனை செய்ததில் ஜார்கண்ட் மாதிலத்தை சேர்ந்த இன்டாஜ் அன்சாரி என்பவரே இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் அவர், குற்ற வழக்கில் ஜார்கண்ட் மாநிலம், தியோகர் மத்திய சிறையில் இருக்கும் விவரமும் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் கடந்த 2-ந் தேதி ஜார்கண்ட் மாநிலம், சென்று இன்டாஜ் அன்சாரியை கைது செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !