Tamilnadu
கண்ணை மறைத்த துணியால் நிகழ்ந்த விபத்து.. வளைகாப்பிற்கு சென்ற இடத்தில் நடந்த சோகம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரின் மகளான ஜோதி என்பவருக்கு வெள்ளையகவுண்டம்பட்டியில் இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் 40 பேர் ஒரு சரக்கு வேனில் வெள்ளையகவுண்டம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் எப்.கீழையூர் அருகே வேன் சென்று கொண்டிருந்த போது எதிரே மணப்பாறை நோக்கி காய்கனி ஏற்றிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் குடையகவுண்டம்பட்டியைச் சேர்ந்த பாப்புசாமி என்றவர் வந்த நிலையில் மழைக்கு தலையில் போட்டிருந்த துண்டு திடீரென முகத்தில் விழுந்து கண்ணை மறைத்தது.
இதனால் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சரக்கு வேன் மீது மோதியது. இதில் சரக்கு வேன் பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுப்பிரமணி மற்றும் வேனில் சென்ற 5 பேர் படுகாயமடைந்த மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”பின்வாங்கிய தவெக அரசு.. அரசுப்பணியில் ராதன் பண்டிட்.. சட்டமன்றம் வரை எதிரொலித்த கடும் எதிர்ப்பு!”
-
“இந்த Change-க்கு பின்னால் பெரிய Exchange இருக்கிறதோ?” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
“Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்த தவெகவின் Dirty Politics” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
”நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 சாபங்கள்.. பொருளாதார அவசர நிலையா?” - முரசொலி தலையங்கம் கேள்வி!
-
அதிகாலையில் நடந்த கொடூரம் : லாரி மீது கார் மோதி காவலர் உட்பட 6 பேர் பலி!