Tamilnadu
ரூ.25 லட்சம், 15 பவுன் மோசடி.. தொழிலதிபரிடம் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் கைவரிசை !
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கருப்பையா (வயது 45) என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்துக்கு சொந்தமான காலி இடம் ஒன்று சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் அமைத்துள்ளது. இந்த இடத்தை விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தீர்வை தேடி வந்த கருப்பையாவுக்கு கோயம்புத்தூரை சேர்ந்த ஜோதிடர் பிரசன்னா என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராகவும், ஜோதிடா் பிரிவுத் தலைவராகவும், மாநில துணைத் தலைவர் இருக்கிறார்.
இவர் நிலம் தொடர்பான பிரச்சனை அனைத்தையும் தான் தீர்த்து வைப்பதாக கூறி கருப்பையாவிடம் அவ்வவ்போது பணம் வாங்கிவந்துள்ளார். அதன் படி பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி கருப்பையாவிடம் 25 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.
மேலும் இது போதாது எனக் கூறி, கருப்பையா மனைவியின் 15 பவுன் நகையையும் வாங்கியுள்ளார். ஆனால் தொடர்ந்து பூஜையும் செய்யாமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமலும் ஜோதிடர் பிரசன்னா ஏமாற்றிவந்துள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக கருப்பையா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி பிரசன்னா மேல் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்ததாக பிரசன்னாவின் மனைவி அஸ்வினி (31), ஆா்.எஸ்.புரத்தைச் சோந்த ஹரிபிரசாத் (28), பிரகாஷ் (58) ஆகியோா் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!