Tamilnadu
காதலி இறந்த துக்கத்தில் காதலன் எடுத்த விபரீத முடிவு.. கடைசியாக வாலிபர் அனுப்பிய WhatsApp மெசேஜ்!
சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதல் இரு குடும்பத்திற்கும் தெரிந்து பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
இதையடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் புற்றுநோயால் பாதித்திருந்த கிறிஸ்டோபரின் காதலி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இதனால், கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் தனது சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் அவரை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்து கல்லூரி அருகே ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த வாலிபர் சடலத்தை போலிஸார் மீட்டுள்ளனர். இவர் குறித்து விசாரணை செய்தபோதுதான் அது கிறிஸ்டோபர் என தெரியவந்தது.
இது குறித்து போலிஸார் விசாரணை செய்ததில், வருகின்றனர். காதலி இறந்த துக்கத்தில் கிறிஸ்டோபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து காண்டது தெரியவந்துள்ளது. காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!