தமிழ்நாடு

குடும்பமாகச் சேர்ந்து நகைக் கடையில் கைவரிசை.. காட்டிக் கொடுத்த CCTV: 3 பேர் கைது!

சென்னையில் குடும்பமாகச் சேர்ந்து நகைக்கடையில் திருடிய மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர்.

குடும்பமாகச் சேர்ந்து நகைக் கடையில் கைவரிசை..  காட்டிக் கொடுத்த CCTV: 3 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது நசீர். இவர் மாதவரம் அடுத்த மூலக்கடை பகுதியில் பாத்திமா ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த சர்மிளா என்பவர் தனது மகள் மற்றும் மகனுடன் கடந்த 25ஆம் தேதி இங்கு நகை வாங்க வந்துள்ளார். ஆனால் அவர்கள் நகை எதுவும் வாங்காமல் சென்றனர்.

குடும்பமாகச் சேர்ந்து நகைக் கடையில் கைவரிசை..  காட்டிக் கொடுத்த CCTV: 3 பேர் கைது!

இதையடுத்து நகைக்கடையின் உரிமையாளர் முகமது நசீர் நகைகளைப் பரிசோதனை செய்தபோது 16 கிராம் எடையுள்ள 2 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. பின்னர் கடையிலிருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது சற்று நேரத்திற்கு முன்பு நகைவாங்க வந்த கும்பல் நகையைத் திருடும் காட்சிப் பதிவாகியிருந்தது. இதனையடுத்து ஷர்மிளா குடும்பத்தின் மீது நகைக்கடை உரிமையாளர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குடும்பமாகச் சேர்ந்து நகைக் கடையில் கைவரிசை..  காட்டிக் கொடுத்த CCTV: 3 பேர் கைது!

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் நகை திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து தாய் ஷர்மிளா மகள் ஜெயஸ்ரீ மகன் சசிதரன் ஆகிய மூன்று பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories