Tamilnadu
சென்னை செஸ் ஒலிம்பியாட் : தமிழ்நாடு முதலமைச்சருக்கு 7 மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து !
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கவுள்ளது. இதனை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்கவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களை தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர்.
இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் உள்ளிட்டவர்கள், சென்னை செஸ் தொடர் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதோடு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சர்வதேச செஸ் போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : சேலம் அ.தி.மு.க நிர்வாகி கைது!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமானது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
உங்களிடம் நான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு இதுதான் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
பா.ஜ.க-வின் கொட்டத்தை அடக்கிய பஞ்சாப் : சண்டிகர் திட்டத்தில் இருந்து பின் வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!