Tamilnadu
இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசிய ஆசிரியர்.. போக்சோவில் சிறையில் அடைத்து போலிஸ் அதிரடி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 270 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் 16 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் பணிபுரியும் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசுவதாக கூறி பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான ஏராளமான போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்தப் பிரச்சனை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அதிகாரிகள் காவல்துறையினர் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தாமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி அறிவிப்பு.
மேலும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரின் சாத்தூர் தாலுகா போலிஸார் பள்ளி ஆசிரியர் தாமோதரனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து தாலுகா காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?