Tamilnadu
புலியை உயிருடன் பத்திரமாக பிடித்த தமிழ்நாட்டு வேட்டை காவலர்களுக்கு சிறப்பு விருது.. குவியும் பாராட்டு!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சிறப்பாக பணியாற்றிய வேட்டை தடுப்பு காவலர்கள் 3 பேருக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சர்வதேச புலிகள் தினமான ஜூலை 29 அன்று விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் T23 புலி மற்றும் சங்கர் யானை பிடிபட்ட போது முன்களத்தில் சிறப்பாக பணியாற்றிய வேட்டை தடுப்பு காவலர்கள் பொம்மன், மாதன், மீன் காளன் ஆகிய மூவருக்கு சர்வதேச புலிகள் தினத்தன்று மகாராஷ்டிராவில் விருது வழங்கி கவுரவிக்க உள்ளனர்.
தேசிய புலிகள் தினமான ஜூலை 29ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள வனத்துறை அகாடமியில் நடைபெறும் விழாவில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் இந்த விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு காவலருக்கு பலரும் பாராட்டுக்களை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!