இந்தியா

2 வருடத்தில் 21 பேர்.. பதுங்கி பாய்ந்து பலி வாங்கிய பெண் புலி.. வனத்துறையில் சிக்கியது எப்படி ?

21 பேரை கொன்ற 9 வயது 'ஆட்கொல்லி' பெண் புலி ஒன்றை, வனத்துறையினர் பிடித்து புலிகள் காப்பகத்தில் விட்டுள்ளனர்.

2 வருடத்தில் 21 பேர்.. பதுங்கி பாய்ந்து பலி வாங்கிய பெண் புலி.. வனத்துறையில் சிக்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தரபிரதேசத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து மனிதர்களை அச்சுறுத்தி வந்த பெண் புலி வனத்துறையினரால் பத்திரமாக பிடிக்கப்பட்டது. 'Man Eater' என்று சொல்லப்படும் இந்த பெண் புலி, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 21 பேரை கொன்றுள்ளது.

இந்த 'ஆட்கொல்லி' புலியை தற்போது உத்தரபிரதேச வனத்துறையினர் கன்னி வைத்து பிடித்துள்ளனர். இந்த பெண் புலியை பிடிக்கப்போன இடத்தில் மற்றொரு ஆண் புலியும் சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட ஆண் புலியை வனப்பகுதியிலும், பெண் புலியை லக்னோ வனவிலங்கு காப்பகத்தில் விடப்பட்டுள்ளது.

2 வருடத்தில் 21 பேர்.. பதுங்கி பாய்ந்து பலி வாங்கிய பெண் புலி.. வனத்துறையில் சிக்கியது எப்படி ?

இது குறித்து வனவிலங்கு காப்பக இயக்குநர் கூறுகையில், "9 வயதான இந்த பெண் புலியை பிடித்த போது, அதன் உடம்பில் ஏற்கனவே காயங்கள் இருந்தது. எனவே அதனை பத்திரமாக புலிகள் மறுவாழ்வு காப்பகத்தில் விடப்பட்டுள்ளது. தற்போது இது தனிமையில் இருக்கிறது. இதன் நடவடிக்கையை பொறுத்து அடுத்தடுத்து முடிவுகள் எடுக்கப்படும். தற்போது அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

2 வருடத்தில் 21 பேர்.. பதுங்கி பாய்ந்து பலி வாங்கிய பெண் புலி.. வனத்துறையில் சிக்கியது எப்படி ?

21 பேரை கொன்ற ஆட்கொல்லியான பெண் புலி பிடிபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பெண் புலியால் கொல்லப்பட்ட நபரின் உடல்கள் 4 பாகங்களாக சிதறி, 10 நாட்கள் இடைவெளியில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

banner

Related Stories

Related Stories