Tamilnadu
'0 ஆன அ.தி.மு.க' - "இவரு எங்க MP இல்ல.." நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் போட்ட எடப்பாடி !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.
பின்னர் சமீப காலமாக ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை உச்சத்தை எட்டியது. இதனால் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சென்னை வானகரம் அருகே ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்றது. அதேவேளையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை பழனிசாமி தரப்பினர் பூட்டியதால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தரப்பினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திக்கொண்டனர்.
இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் அந்த இடமே கலவரமாக மாறியது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தடிதடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஒருபுறம் அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் ரகளையில் ஈடுட்ட நேரத்தில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க தலைமை அலுவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். கலவரம் நடந்த அதிமுக அலுவகத்தை ராயபேட்டை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
இன்னொரு புறம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்று மதன் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜெ.சி.டி பிராபகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கிறேன்" எனக் கூறினார்.
அதன்பின்னர் இருதரப்பும் அடுத்த தரப்பை சேர்ந்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். அதன் ஒருபகுதியாக அ.தி.மு.க.வின் ஒரே எம்.பியும் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில், ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்.பியாக கருத வேண்டாம் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை மக்களவை சபாநாயகர் அங்கீகரித்தல் மக்களவையில் அதிமுகவுக்கு இருந்த ஒரே எம்.பி பதவியும் பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!