Tamilnadu
நேருக்கு நேர் மோதிய கார்கள்.. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு காப்பாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செந்தோட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர்- கிருத்திகா. இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான காரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மற்றொரு காரில் கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, குருக்கிலியம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், கார்கள் பலத்த சேதமடைந்தன. இவ்விபத்தில் பல்லடத்தை சேர்ந்த தம்பதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அப்போது, நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து விட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலை வழியாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவைக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை கண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடியாக அவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர்களுடன் அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க-வினரையும் அனுப்பி வைத்தார். உடன் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும்,இச்சம்பவம் குறித்து அன்னூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அன்னூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!