Tamilnadu

LUDO மூலம் பழக்கம்..10ம் வகுப்பு சிறுமியை வீடியோகால் பேசவைத்து, பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் அதிரடி கைது!

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆன்லைன் விளையாட்டான LUDOவில் விக்னேஷ் என்கிற நபர் அறிமுகமாகியுள்ளார். சென்னை திருவெற்றியூரை சேர்ந்த EEE டிப்ளமோ பட்டதாரியான விக்னேஷ் 10ம் வகுப்பு மாணவியோடு நட்போடு பழகலாம் எனக் கூறி செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.

பின்னர் சமூக வலைதளங்கள் மூலம் இவர்கள் நட்பை வளர்த்த நிலையில், ஒருகட்டத்தில் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். இந்த பழக்கம் ஆபாச உரையாடலாக மாறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த உரையாடலை வைத்து சிறுமியை மிரட்டி நிர்வாணமாக வீடியோ காலில் பேச வலியுறுத்தியுள்ளார்.

சிறுமியும் அவ்வாறு செய்த நிலையில், அதையும் வீடியோவாக எடுத்துவைத்துள்ளார். பின்னர், ஒருநாள் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அவரின் வீட்டுக்கு சென்ற விக்னேஷ் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒருநாள் சிறுமியின் மொபைல் போனை அவரது பெற்றோர் எடுத்து பார்த்தபோது அதில் விக்னேஷ் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தி இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக விசாரிக்கும்போது, சிறுமி நடந்த உண்மையை கூறியுள்ளார்.

உடனடியாக சிறுமியின் பெற்றோர் விக்னேஷை தொடர்புகொண்டு பேசியபோது, சிறுமியின் வீடியோக்கள் தன்னிடம் நிறைய இருப்பதாகவும், ஒரு வீடியோவிற்கு 25 ஆயிரம் விதம் 50 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பணத்தை தராவிட்டால் சிறுமியின் வீடீயோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு பணம் அனுப்ப தனது GPAY எண்ணையும் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஆவடி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலிஸார், மொபைல் எண்ணை வைத்து செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளமேடு பகுதியில் பதுங்கியிருந்த விக்னேஷை கைது செய்தனர்

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், LANET ROMEO எனும் ஓரின சேர்க்கை ஆப் மூலமாக சந்திக்கும் ஆண்களை தாக்கி பணம் பறித்த வழக்கில் விக்னேஷ் சிறை சென்று வந்தது தெரியவந்தது, சிறையில் இருந்து வெளிவந்தவர் செங்கல்பட்டு சென்று வீடு வாடகை எடுத்து தங்கி ஆப் மூலம் மீண்டும் குற்ற செயலியில் ஈடுபட ஆரம்பித்து உள்ளதும் தெரியவந்தது. அவரை திருவள்ளூர் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி போலிஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

Also Read: பாஜக-வின் போலி பிம்பத்தை அம்பலப்படுத்திய கனமழை.. குஜராத் மாடல் லட்சனம் இதுதானா?: வெளுத்து வாங்கிய மக்கள்!