Tamilnadu
பாஸ்தா சாப்பிட்ட இளம் பெண் திடீர் மரணம்.. காதல் கணவர் கண்முன்னே நடந்த சோகம்!
விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரதிபா. இவர்கள் இருவரும் கடந்த மாதம்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து காதல் தம்பதிகள் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று மாலை விழுப்புரம் வந்துள்ளனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஒயிட் பாஸ்தா வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே பிரதிபா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் உடனே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வந்துள்ளார்.
அப்போது பிரதிபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உடற்கூறு ஆய்விற்கு பிறகுதான் பாஸ்தா சாப்பிட்டதால் அந்த பெண் உயிரிழந்தாரா என்பது தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்த பிரதிபாவுக்கு இதய அடைப்பு பிரச்சனை இருந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரியாணி, ஷவர்மா, நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்தவர்களை அடுத்து தற்போது பாஸ்தா சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்துள்ளது உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!
-
உரத் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை தேவை! : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
S.I.R - மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க : தேர்தல் ஆணையம் என்ன 'சிட்டி ரோபா'வா - முரசொலி தாக்கு!
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?