இந்தியா

Tollgate ஊழியரை தாக்க முயன்ற Great Khali.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

மல்யுத்த வீரர் கிரேட் காளி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tollgate ஊழியரை தாக்க முயன்ற Great Khali.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரேட் காளி. இவர் WWE என்ற மல்யுத்த விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் பரிட்சியமானவர். மேலும் இவர் பஞ்சாப் காவல்துறையிலும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கிரேட் காளி தனது காரில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையிலிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரது காரை நிறுத்தியுள்ளனர்.

மேலும் அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு போலிஸார் அங்கு வந்து சமாதானம் செய்து அவரை அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tollgate ஊழியரை தாக்க முயன்ற Great Khali.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இந்த சம்பவத்திற்கு கிரேட் காளி விளக்கம் கொடுத்துள்ளார். அவரின் விளக்கத்தில், "பில்லூரில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் எனது காரை நிறுத்தி செல்ஃபி எடுக்க அழைத்தார். நான் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் இனவெறி கருத்துக்களைத் தெரிவித்து மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து இது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories