Tamilnadu

அடுத்த 2 ஆண்டில் TOLLGATE அகற்றம்.. ஆனால்? : ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியது என்ன?

சுங்கச்சாவடி நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு விரைவில் மின்னணு முறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

வேலூர் வந்த ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூலம் தமிழ்நாட்டில் சாலைத் திட்டங்கள் கவனத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் புதிய விமான போக்குவரத்து முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இடத்தை தேர்வு செய்தவுடன் அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடி நடைமுறையில் மாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு சாலையில் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்கிறோம் என்பதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு 90% நிலம் இருந்தால்தான் சாலைப் பணி தொடங்கப்படும். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் 8 வழிச்சாலை திட்டத்தைத் தொடங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Also Read: பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க நிர்வாகி.. கடிதம் எழுதி இளம் பெண் தற்கொலை!